கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலைய சுவாமி திருக்கோவில் தேர்த்திருவிழாவினை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வரும் டிசம்பர் 26-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலைய சுவாமி திருக்கோயில் மார்கழி திருவிழாவின் முக்கிய நாளான தேர்த்திருவிழாவினை முன்னிட்டு 26.12.2023 (செவ்வாய்க்கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.
26.12.2023 அன்று அறிவிக்கப்பட உள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக 2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20-ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.