சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் நின்று கொண்டிருந்த இரயில் மீது மற்றொரு இரயில் மோதியதில், 515 பயணிகள் காயமடைந்துள்ளனர். இதில், 102 பயணிகளுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
சீனா தலைநகர் பெய்ஜிங் அருகே உள்ள ஷங்பிங் நகரில் இருந்து மெட்ரோ இரயில் புறப்பட்டு சென்றது. தண்டவாளத்தில் பனி படர்ந்திருந்ததால், தானியங்கி பிரேக்கிங் அமைப்பால் இரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது.
அப்போது, அதே தண்டவாளத்தில் மற்றொரு மெட்ரோ இரயில் வந்துள்ளது. முன்னாள் நின்று கொண்டிருந்த இரயில் மீது பின்னால் வேகமாக வந்த இரயில் மோதி விபத்துக்குள்ளானது.
தண்டவாளத்தில் அதிகளவில் பனி படிந்திருந்ததால், பின்னால் வந்த இரயிலில் பிரேக் பிடித்தும் நிற்காமல் சென்றதால் நின்றுகொண்டிருந்த இரயில் மீது மோதியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை மற்றும் மீட்புக் குழுவினர், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதித்தனர்.
இந்த கோர விபத்தில், இரண்டு இரயில்களிலும் பயணித்த, 515 பயணிகள் காயம் அடைந்தனர். இதில், 102 பயணிகளுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.