இந்தி தெரியாதா என்று , கோவா விமான நிலையத்தில் மத்திய தொழிற் பாதுகாப்பு படை வீரரால் மிரட்டப்பட்டதாக கூறிய தமிழகத்தைச் சேர்ந்த சர்மிளா ராஜசேகர் என்ற பெண் யார் என்ற உண்மை இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது .
சமூக வலைதளங்களில் ஷர்மிளா ராஜசேகர் தனக்கு இந்தி தெரியாது என்று கூறியதற்கு, அந்த சி.ஐ.எஸ்.எஃப் வீரர், நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டதற்கு தமிழ்நாட்டில் இருந்து வருவதாக ஷர்மிளா பதிலளித்துள்ளார். அதற்கு, சி.ஐ.எஸ்.எஃப் வீரர் நக்கலாக அச்சா எனக் கூறி, “தமிழ்நாடு இந்தியாவில் தானே இருக்கு, அப்ப ஹிந்தி தெரியுனும்ல, ஹிந்தி தேசிய மொழி, நீங்க கண்டிப்பா ஹிந்தி கத்துக்கணும்” என்று மிரட்டியதாக செய்தி வந்துள்ளது .
மேலும் ஊடகங்களில் பேசிய ஷர்மிளா, இது தொடர்பாக, ஊடகங்களிடம் பேட்டி அளித்த ஷர்மிளா ராஜசேகர், இது போன்றவர்களின் இந்தி திணிப்பு நடத்தையால், இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசைகூட போய்விட்டது என்று தெரிவித்துள்ளார்.
உண்மையில் இந்த ஷர்மிளா யார் என்று இப்போது தெரியவந்துள்ளது. அதாவது, கடந்த மே மாதம் 14ஆம் தேதி ராகுல் காந்தியின் டுவிட்டர் பதிவை பகிர்ந்து இவர் ஹிந்தியில் ட்வீட் செய்துள்ளார்.