தென் இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் நேற்று காலை 08.30 மணி முதல் இன்று காலை 08.30 மணி வரை பதிவான மழை விவரம் (சென்டிமீட்டரில்).
மாமல்லபுரம் பொதுப்பணித்துறை பங்களா பகுதியில் 5 சென்டிமீட்டர் மழையும், மீனம்பாக்கம் பகுதியில் 4 சென்டிமீட்டர் மழையும், மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம், தஞ்சாவூர் மாவட்டம் அணைக்கரை, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஆகிய பகுதிகளில் தலா 3 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
சென்னை தேனாம்பேட்டை, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில், மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு ஆகிய பகுதிகளில் தலா 2 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.