குவைத் மன்னர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-சபா (86 வயது), இன்று காலமானதாக அந்நாட்டின் அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
கடந்த 2006-ஆம் ஆண்டு குவைத் மன்னர் ஷேக் சபா அல்-அஹ்மத் அல்-சபாவால், ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-சபா பட்டத்து இளவரசராக நியமிக்கப்பட்டார். கடந்த 2020-ஆம் ஆண்டு குவைத் மன்னர் ஷேக் சபா அல்-அஹ்மத் அல்-சபா (91 வயதில்) மறைந்தார். மன்னர் ஷேக் சபா மறைவைத் தொடர்ந்து, அவருடைய சகோதரர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-சபா மன்னராக பதவியேற்றார்.
இவர் கடந்த மாதம் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், குவைத் மன்னர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-சபா (86 வயது), இன்று காலமானதாக அந்நாட்டின் அரசு தொலைக்காட்சியில் தகவல் வெளியாகி உள்ளது.