காஞ்சிபுரம் செல்போன் கடையில் திருட்டில் ஈடுபட்ட: 4 பேருக்கு 6 ஆண்டு சிறை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் பஜாரில் அப்துல் ரஉற்மான் (32) என்பவருக்குச் சொந்தமான பிஸ்மி மொபைல் வேல்டு என்ற செல்போன் கடை உள்ளது. இந்த கடையில் கடந்த 17.07,2023 அன்று இரவு கடையின் ஷட்டரை உடைத்து பல லட்சம் ரூபாய் விலைமதிப்புள்ள 361 செல்போன்களை அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் திருடிச் சென்று விட்டதாகப் புகார் எழுந்தது.
புகாரின் அடிப்படையில் சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து திருட்டில் சம்மந்தப்பட்ட ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஹமீத் ஹீசைன் (35), இர்பான் (28) ஜாபித் (25), மற்றும் அலிஜான் (50) ஆகிய நான்கு பேரை கைது செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு ஸ்ரீபெரும்புதூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இன்று இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
அதில், வழக்கில் தொடர்புடைய ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஹமீத் ஹீசைன் (35) , இர்பான் (28) ஜாபித் (25), மற்றும் அலிஜான் (50) ஆகிய நான்கு பேரும் குற்றவாளிகள் என்றும், அவர்களுக்கு 6 வருடம் சிறை தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதித்து காஞ்சிபுரம் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.