டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2A முடிவுகள், பத்து மாதங்கள் கழித்து, டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட புயலினால் தாமதமானது என்பது நியாயமான காரணமாகத் தெரியவில்லை எனத் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2A முடிவுகள், வரும் ஜனவரி 12, 2024 அன்று வெளியிடப் போவதாக அறிவித்திருக்கிறது தமிழக அரசு. மேலும், தமிழக பாஜக கோரிக்கையை ஏற்று, தேர்வு முடிவுகள் வெளியிடக் காலதாமதமானதற்கான காரணங்களையும் கூறியிருக்கிறது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2A முடிவுகள், வரும் ஜனவரி 12, 2024 அன்று வெளியிடப் போவதாக அறிவித்திருக்கிறது தமிழக அரசு. மேலும், @BJP4Tamilnadu கோரிக்கையை ஏற்று, தேர்வு முடிவுகள் வெளியிடக் காலதாமதமானதற்கான காரணங்களையும் கூறியிருக்கிறது. எனினும், அந்தக் காரணங்கள் ஏற்புடையதாக இல்லை.
கடந்த… https://t.co/ObpQyzcHPx pic.twitter.com/d3ls1UBExk
— K.Annamalai (@annamalai_k) December 16, 2023
எனினும், அந்தக் காரணங்கள் ஏற்புடையதாக இல்லை. கடந்த பிப்ரவரி மாதம் நடந்த தேர்வின் முடிவுகள் வெளியீடு, பத்து மாதங்கள் கழித்து, டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட புயலினால் தாமதமானது என்பது நியாயமான காரணமாகத் தெரியவில்லை. தேர்வு முடிவுகள் வெளியிடுவதாக தற்போது அறிவித்துள்ள 2024 ஜனவரி 12 இறுதியானதாக இருக்கும் என்று நம்புகிறோம்.
இனி வரும் காலங்களில், இது போன்ற அவசியமற்ற தாமதங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் தமிழக பாஜக
சார்பாக வலியுறுத்திக் கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.