ஜம்மு காஷ்மீரின் புகழ்பெற்ற ஸ்கை ரிசார்ட்டான குல்மார்க்கில் மைனஸ் 2.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி, குளிர்கால அதிசய பூமியாக மாறியுள்ளது.
காஷ்மீரின் மத்திய மற்றும் வடக்கு மாவட்டங்களில் இரவு வெப்பநிலை சற்று மேம்பட்டது, அதே சமயம் தெற்குப் பகுதிகள் மேலும் சரிவைக் கண்டன. ஜம்மு மற்றும் காஷ்மீரின் கோடைகால தலைநகரான ஸ்ரீநகரில் மைனஸ் 1.3 டிகிரி செல்சியஸ் காஷ்மீரின் நுழைவாயிலான காசிகுண்டில் மைனஸ் 3.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அனைத்து பகுதிகளிலும் பூஜ்ஜியத்திற்கு குறைவான வெப்பநிலை நிலவியது.
புகழ்பெற்ற ஸ்கை ரிசார்ட்டான குல்மார்க்கில் மைனஸ் 2.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் அதிக எண்ணிக்கையில் குவிந்துள்ளனர். கொட்டி வரும் பனியை கையில் பிடித்து மேலே தூக்கி எறிந்து விளையாடும் சுற்றுலாப்பயணிகள், செல்பி எடுத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மேலும் பனிச்சறுக்கு உள்ளிட்ட விளையாட்டுகளிலும் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு நிலவும் பனிப்பொழிவு மகிழ்ச்சியை தந்தாலும், பனியால் சாலை போக்குவரத்து முடங்கியுள்ளதால் வெளியே செல்ல முடியாத நிலை உள்ளதாக சுற்றுலாப் பயணி ஒருவர் தெரிவித்தார்.