குவைத் மன்னர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-சபா, உடல் நலம் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலகத்தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் இரங்கல் குறிப்பு ஒன்றை விடுத்துள்ளது. அதில், குவைத் மன்னர் அமீர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாஹ் மறைவுக்கு இந்திய அரசும் மக்களும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த தலைவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் டிசம்பர் 17 ஆம் தேதி நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. மேலும் பிரதம மந்திரியின் சிறப்பு தூதராக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, டிசம்பர் 17 ஆம் தேதி குவைத் சென்று இறுதிச் சடங்கில் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது
இதனிடையே குவைத் மன்னர் ஷேக் நவாப் அஹமத் ஜாபர் சபாவின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக சென்னை தலைமைச் செயலகத்தில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டு உள்ளது.