இந்த ஆண்டு அக்டோபர் வரை 72 லட்சத்துக்கும் அதிகமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்தியா வந்துள்ளனர் என மக்களவையில் மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி இதனைத் தெரிவித்தார்.
இது குறித்த மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி,
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை 10.56 மில்லியனாக (2018 இல்), 10.93 மில்லியன் (2019 இல்), 2.74 மில்லியனாக (2020 இல்), 1.52 மில்லியனாக (2021 இல்) மற்றும் 6.44 மில்லியனாக (2022 இல்) வீழ்ச்சியடைந்துள்ளது.
2023 ஆம் ஆண்டில், அக்டோபர் வரையில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 7.24 மில்லியனாக இருந்தது.
“முந்தைய பாரத் கோல்ட் மைன்ஸ் லிமிடெட் (கோலார் கோல்ட் ஃபீல்ட்ஸ்) இன் உள்கட்டமைப்பு / வசதிகளை சுற்றுலாத் தளமாக மாற்றுவதற்கான முன்மொழிவை (யூனியன்) சுரங்க அமைச்சகம் சுற்றுலா அமைச்சகத்துடன் எடுத்துக்கொண்டது எனக் கூறினார்.
“இருப்பினும், மகாராஷ்டிராவில் இரண்டு திட்டங்கள் மற்றும் ஒடிசாவில் ஒரு திட்டம் உட்பட மொத்தம் ₹ 5,294.11 கோடிக்கு நாட்டில் 76 திட்டங்களுக்கு சுற்றுலா அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது,” என்று கூறினார்.