கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 292 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பால் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 341 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் கேரளா மாநிலத்தில் மட்டும் 292 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு பதிவாகி இருக்கிறது.
கேரளாவில் கொரோனாவுக்கு தற்போது சிகிச்சை பெற்று வருகிற ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 2041 ஆகவும் உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் கேரளாவில் 3 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் மொத்தமாக கொரோனாவுக்கு தற்போது சிகிச்சை பெறுகிறவர்கள் ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 2311.
கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவருவது மக்களிடையில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.