உலகப்புகழ் பெற்ற அருள்மிகு தர்பாரண்யேஸ்வரர் திருக்கோவில், காரைக்கால் அருகே திருநள்ளாற்றில் அமைந்துள்ளது. நவக்கிரக ஸ்தலங்களில் இந்த திருக்கோவில் சனீஸ்வரனுக்கு உரிய கோயிலாகப் போற்றி வணங்கப்படுகிறது.
சனிப்பெயர்ச்சி விழா, ஒவ்வொரு இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். அந்த வகையில், இந்த சனிப்பெயர்ச்சி விழா டிசம்பர் 20-ம் தேதி மாலை 5.20 மணிக்கு நடைபெற்றது.
அப்போது, மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனிபகவான் பிரவேத்தார். இதனைத் தொடர்ந்து, சனீஸ்வர பகவானுக்குச் சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றன.
விழாவில் தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மனம் உருக சுவாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்களின் நலன் கருதி திருக்கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
பாதுகாப்பு பணிக்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்படுத்தப்பட்டனர். திருக்கோவில் வளாகம் மற்றும் முக்கியப் பகுதிகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு செய்யப்பட்டது.
விழாவிற்கு வருகை தந்த பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானமும் வழங்கப்பட்டது.