இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு முன்னதாக, டெல்லி – அயோத்தி இடையிலான விமான சேவை டிசம்பர் 30-ஆம் தேதி தொடங்கும் என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
அயோத்தியில் இராமர் கோவில் கட்டுமானப் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. கோவில் கும்பாபிஷேகம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 22-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
ஏற்கனவே அயோத்தியில் சிறிய அளவில் விமான நிலையம் இருந்த நிலையில், அங்கு தற்போது பெரிய அளவில் விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. இண்டிகோவின் விமானம் டிசம்பர் 30-ஆம் தேதி முதல் டெல்லியில் இருந்து அயோத்திக்கு செயல்பட தொடங்குகிறது.
இந்நிலையில் இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு முன்னதாக, டெல்லி – அயோத்தி இடையிலான விமானம் சேவை, டிசம்பர் 30-ஆம் தேதி தொடங்கும் என ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த வழித்தடத்தில் தினசரி விமான சேவை ஜனவரி 16-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.