எக்ஸ் தளம் முடங்கியதால் உலகம் முழுவதும் உள்ள அதன் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டனர்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய உலக பணக்காரரும், டெஸ்லா நிறுவன தலைமை செயல் அதிகாரியுமான எலான் மஸ்க் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
ட்விட்டர் தலைமை செயல் அதிகாரி (CEO) பராக் அகர்வால், உள்ளிட்ட உயர் அதிகாரிகளை அதிரடியாக அவர் நீக்கினார். இதனைத்தொர்ந்து பல ஊழியர்களும் வெளியேற்றப்பட்டனர்.
பின்னர் ட்விட்டர் நிறுவனத்தின் பெயரை எக்ஸ் எனவும் எலன் மஸ்க் மாற்றினார். இந்த எக்ஸ் தளத்தை உலகம் முழுவதும் ஏராளமானோர் பின் தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை முதல் எக்ஸ் தளம் செயலிழந்தது.
இதனால் உலகம் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் கடும் அவதியடைந்தனர்.
எக்ஸ் தளத்தில் பயனர்கள் தங்கள் பதிவுகளை உருவாக்க முடிகிறது. ஆனால் அந்த பதிவுகளை யாரும் பார்க்க முடிவதில்லை. இந்நிலையில்., எக்ஸ் தளம் முடங்கிய சில நிமிடங்களில் #XDown டிரெண்டானது.