பப்புவா நியூ கினியாவில் எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து, நிவாரண பொருட்களை இந்தியா அனுப்பியுள்ளது.
நவம்பர் 20 ஆம் தேதி, பப்புவா நியூ கினியாவில் உள்ள உலவுன் மலையில் ஒரு பெரிய எரிமலை வெடித்ததால், 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டனர். இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர். இந்நிலையில் அவர்களுக்கு அவசர மனிதாபிமான தேவைகளை உருவாக்கி உள்ளது.
இந்நிலையில் பப்புவா நியூ கினியாவில் எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து இந்தியா உடனடியாக ஒரு மில்லியன் டாலர் நிவாரண உதவியை அறிவித்துள்ள நிலையில், இன்று நிவாரண பொருட்கள் சிறப்பு விமானம் மூலம் பப்புவா நியூ கினியாவிற்கு அனுப்பட்டது.
இந்த 6 டன் பொருட்களில் அத்தியாவசிய மருந்துகள், அறுவை சிகிச்சை பொருட்கள், சானிட்டரி பேட்கள், ரேபிட் ஆன்டிஜென் சோதனை கருவிகள், pregnancy test kits, கொசு விரட்டிகள், குழந்தைகளுக்கான உணவுகள் மற்றும் 11 டன் பேரிடர் நிவாரண பொருட்கள் அனுப்பட்டுள்ளன.