தமிழ் திரையுலக வரலாற்றிலேயே முதன் முறையாக ரசிகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட படத்தின் தலைப்பு என்ற பெருமையை பிரபுதேவா நடிப்பில் வெளியாகியுள்ள ‘ ஜாலியோ ஜிம்கானா ‘ என்ற திரைப்படம் பெற்றுள்ளது.
‘சார்லி சாப்ளின்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அப்படத்தின் இயக்குநர் ஷக்தி சிதம்பரம் உடன் நடிகர் பிரபுதேவா மீண்டும் இணைந்துள்ளார்.
இப்படத்தை டிரான்ஸ் இண்டியா மீடியா & எண்டர்டெய்ன்மெண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரித்துள்ளது. சமீபத்தில் இப்படத்திற்கு ‘ ஜாலியோ ஜிம்கானா ‘ என்ற தலைப்பு வைக்கப்பட்டது.
இப்படத்தின் தலைப்பு ரசிகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதன் முறையாக ரசிகர்களால் ஒரு படத்தின் தலைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த திரைப்படம் இந்திய திரையுலகம் இதுவரை காணாத கதைக்களமாக அமைந்துள்ளதாக இப்படத்தின் இயக்குநர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர், “மக்களாக தேர்ந்தெடுத்த படத்தின் டைட்டில் மக்களிடம் எப்படி ரீச் ஆனதோ அதுபோலவே படமும் ரீச் ஆகும். ஏனென்றால் படம் கதையாகவும் காட்சியாகவும் அவ்வளவு அருமையாக வந்துள்ளது. அதேபோல் பட்ஜெட் ஆகவும் இது பெரிய படம். தயாரிப்பாளர் ராஜேந்திர ராஜன், பாடல்கள் மற்றும் ஆக்ஷன் காட்சிகளுக்கான பிரமாண்டமான செட்களை குறை வைக்காமல் செய்து தந்தார்.
படத்தின் திரைக்கதையைப் போலவே, பாடல்களும் இசையும் இந்தப் படத்தில் முக்கியமான ஒரு அம்சம். இசையமைப்பாளர் அஸ்வின் விநாயகமூர்த்தி அற்புதமான இசையைக் கொடுத்துள்ளார். கணேஷ் சந்திராவின் ஒளிப்பதிவும், ஜனார்த்தனனின் கலை இயக்கமும் படத்திற்குப் பலமாக அமைந்துள்ளது.
பிரபுதேவா, மடோனா, யோகிபாபு, அபிராமி, யாசிகா ஆனந்த், புஜிதா பொன்னடா கிங்ஸ்ட்லி, எம்.எஸ்.பாஸ்கர், ரோபோ சங்கர், ஜான் விஜய், சாய்தீனா, மதுசூதனராவ், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்,” என்று கூறினார்.