ஷாருகான் நடிப்பில் இன்று வெளிவந்த ‘டன்கி’ திரைப்படம் குறித்து ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களே வந்துள்ளது.
ஜவான் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு ஷாருக்கான் நடித்துள்ள திரைப்படம் டன்கி. 3 இடியட்ஸ், பிகே, சஞ்சு உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜ்குமார் ஹிரானி, டன்கி படத்தை இயக்கியுள்ளார்.
ஷாருக்கான் உடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை டாப்ஸி நடித்துள்ளார். மாபெரும் பொருட்செலவில் தயாராகியுள்ள இந்த படத்தை இந்த படத்தை ரெட் சில்லீஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும் ஜியோ ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.
இந்நிலையில் இந்த படம் இன்று திரைக்கு வந்தது. இதுகுறித்த விமர்சனங்களை ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒரு ரசிகர், மனதுக்கு இதமான நட்பு, காதல், மண்ணின் மீதுள்ள பாசம், நாட்டுப்பற்று என அனைத்தையும் படம் நன்றாக காட்டியுள்ளதாக தெரிவித்திருக்கிறார்.
மேலும், படத்தின் இறுதிக்காட்சி நன்றாக இருப்பதாகவும் நீதிமன்ற காட்சிகள் நன்றாக இருப்பதாகவும் அந்த ரசிகர் தெரிவித்திருக்கிறார்.
A heart-warming tale of Friendship Emotions Love, and longing for homeland Comedy+Emotion+Patriotism
Climax Scene🤌❤️
CourtRoom Scene ❤️🔥🙌#DunkiReview— Shah Rukh Khan (@srkxjaan) December 21, 2023
ஒரு ரசிகர், படம் சுமாராக இருப்பதாக விமர்சனம் தெரிவித்துள்ளார். இதுவரை வெளிவந்த ஹிரானியின் படங்களிலேயே இதுதான் மிகவும் வீக்கான படம் என்று இந்த ரசிகர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், முதல் பாதியில் வந்த விக்கி கௌஷலின் நடிப்பு நன்றாக இருப்பதாகவும் ஷாருக்கானின் பஞ்சாபி மொழி எரிச்சலூட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதை தவிர படத்தில் பாராட்டும்படி எதுவும் இல்லை என்று இந்த ரசிகர் தெரிவித்திருக்கிறார்.
#DunkiReview #Dunki is at best watchable. Law of averages catches up with Hirani eventually – by far his weakest film.
Biggest problem with the film is that it stays mid all through, except the climax which is good. No quintessential Hirani high points that one expects every… pic.twitter.com/dncSJxm0Mt
— Himanshu Das (@himanshudas02) December 21, 2023
மேலும் இப்படம் குறித்து சினிஹப் வெளியிட்டுள்ள பதிவில், “மாஸ்டர்பீஸ் #Dunki என்பது வெறும் திரைப்படம் அல்ல, இது ஒரு செல்லுலாய்டு திரையுலகம் முழுவதும் கொண்டாடப்பட வேண்டும்.படத்தின் கடைசி 20 நிமிடங்கள் முழுக்க முழுக்க வேடிக்கையாக உள்ளது. இரண்டாம் பத்தி முழுவதும் BEAST லெவலுக்கு எடுத்துச் செல்லும் சென்றது. இது ஹிராணி படங்களில் சிறந்த படமாக உள்ளது” என்று பதிவிட்டுள்ளது.
One Word :- MASTERPIECE ✨#Dunki is not merely a film, its a celluloid on screen that needs to be celebrated all over the World. @RajkumarHirani is a different beast when it comes to cinema as he Merges Comedy, emotions and patriotism in EPIC way. The first half is totally mad… pic.twitter.com/6qxABEEMEM
— CineHub (@Its_CineHub) December 21, 2023
மேலும் முதல் நாளில் இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்களே வந்துள்ளது.