திமுக அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது, நீதித்துறையின் மீதான நம்பிக்கையை இன்னும் அதிகரித்துள்ளது என தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு தனது எக்ஸ் பக்கத்தில், ஊழல் விவகாரத்தில் சகிப்புத்தன்மைக்கு இடமே இல்லை. ஊழலை அதன் வேரில் இருந்து அழிக்கவேண்டும். அறிவாலயமே ஊழல் மற்றும் கொள்ளையின் உருவமாக உள்ளது. இந்த நிலையில், பொன்முடிக்கு வழங்கிய தீர்ப்பை முழு மனதுடன் வரவேற்கிறேன். இதன்மூலம் நீதித்துறையின் மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
ஊழலையும், திமுகவையும் தொடர்புபடுத்தி குஷ்பு வெளியிட்ட பதிவுக்கு சமூக வலைதளங்களில் திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், குஷ்புவின் கருத்து சரியானதே என பாஜகவினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.