காங்கிரஸ், ஜே.டி.யு-வைத் தொடர்ந்து இண்டி கூட்டணியை அவமானப்படுத்தியுள்ளது எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமியின் கோவை இல்லம் மற்றும் கல்லூரியில் கர்நாடகா போலீசார் சோதனை நடத்தினர்.
இது குறித்து அண்ணாமலை தனது பதிவில்,
திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமியின் மகனும், திமுக செயல்தலைவருமான பைந்தமிழ் பாரியின் வீட்டில், அனுமதிக்கப்பட்ட வரம்புகளுக்கு மேல் சட்டவிரோதமாக சுரங்கம் தோண்டியதாக கர்நாடக லோக்ஆயுக்தா இன்று அதிரடி சோதனை நடத்தியது.
Former DMK Minister Thiru Pongalur Palanisamy’s son & DMK functionary Thiru Paintamil Paari’s residence was raided by Karnataka Lokayukta today for illegal mining & mining beyond permitted limits.
It was a rather unfortunate day for DMK, as they stand exposed for corruption on… pic.twitter.com/9kdkZDBH0t
— K.Annamalai (@annamalai_k) December 21, 2023
திமுகவுக்கு இது ஒரு துரதிர்ஷ்டமான நாள், பல துறைகளில் ஊழல் செய்து அவர்கள் வெளியே தெரிகிறார்கள்.
காங்கிரஸ், ஜே.டி.யு-வைத் தொடர்ந்து இண்டி கூட்டணியை அவமானப்படுத்தியுள்ளது. ஆனால் நாள் தேர்வு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது! எனத் தெரிவித்துள்ளார்.