நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, சளி மற்றும் இருமலுக்கான மருந்து கலவைகளை வழங்குவதை இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு தடை செய்துள்ளது. குளிர் எதிர்ப்பு மருந்து கலவைகள் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் பக்கவிளைவுகளைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய மருந்து பொதுக் கட்டுப்பாட்டாளர், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது, “குழந்தைகளுக்கான அங்கீகரிக்கப்படாத சளி எதிர்ப்பு மருந்து கலவைகளைத் தயாரிப்புகள் குறித்து கவலைகள் எழுப்பப்பட்டன. கடந்த ஜூன் 6-ஆம் தேதி நடைபெற்ற நிபுணர் குழு கூட்டத்தில் இந்த விஷயம் விவாதிக்கப்பட்டது.
இதில், குளோர்பெனிரமைன் மாலேட் ஐபி 2மிகி + ஃபைனிலெஃப்ரைன் எச்சிஎல் ஐபி 5மிகி டிராப்/எம்எல் இன் நிலையான மருந்து கலவை பயன்பாடு தொடர்பான பிரச்னை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது” என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், “4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நிலையான மருந்து கலவையைப் பயன்படுத்தக் கூடாது என்று குழு பரிந்துரைத்தது. அதன்படி நிறுவனங்கள் லேபிள் மற்றும் மருந்து சீட்டில் இது தொடர்பான எச்சரிக்கையைக் குறிப்பிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.