2023ஆம் ஆண்டு பாதுகாப்புப் படையில் சரித்திர சாதனை படைத்த 10 இந்தியப் பெண்களைப் பற்றி பார்ப்போம்.
அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பதற்கு என்ற காலம் மாறி இப்போது பெண்கள் இல்லாத துறையே இல்லை என்ற காலம் மாறியுள்ளது.
பாதுகாப்பு படைகளில் பாலின சமத்துவத்தை அதிகரிக்க, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசும் பல்வேறு நடவடிக்கைகளில் மேற்கொண்டது.
பெண்கள் சாதிக்க வேண்டும் என்பதை ஊக்குவிப்பதற்காக ஆயுதப்படைகளில் பணியாற்றும் பெண்களுக்கு அதிகாரிகளுக்கு இணையாக விடுப்புகளை வழங்க பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டார்.
இந்நிலையில் 2023 ஆம் ஆண்டில் இந்திய ராணுவப் படை, விமானப்படை மற்றும் கடற்படையில் சரித்திரம் படைத்த 10 பெண்களைப் பற்றிப் பார்ப்போம்.
1. கமாண்டர் பிரேர்னா தியோஸ்தலி :
கமாண்டர் பிரேர்னா தியோஸ்தலி, இந்திய கடற்படையின் முதல் பெண் அதிகாரியாக இந்திய கடற்படை போர்க்கப்பலுக்கு தலைமை தாங்குகிறார. தற்போது இவர் ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பலின் முதல் லெப்டினன்டாக உள்ளார்.
2. குரூப் கேப்டன் ஷாலிசா தாமி :
குரூப் கேப்டன் ஷாலிசா தாமி, முன்னணி போர்ப் பிரிவுக்கு பொறுப்பேற்ற முதல் பெண் விமானப்படை அதிகாரி ஆனார். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு விமானப்படையின் பறக்கும் பிரிவின், முதல் பெண் விமானத் தளபதியாக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
3. விங் கமாண்டர் தீபிகா மிஸ்ரா :
இவர் ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி, இந்திய விமானப்படையில் கேலண்ட்ரி விருது வென்ற முதல் பெண் ஆனார். 2021 ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கிய 47 உயிர்களை காப்பாற்றியதற்காக, இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
4. கேப்டன் சிவ சௌகான் :
உலகின் மிக உயரமான போர்களமாக அறியப்படும் சியாச்சின் உச்சியில் பாதுகாப்பு பணியில் முதல் பெண் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். ஜனவரி மாதம் முதல் இங்கு பதவியில் இருக்கும் அவர், அவரின் குழுவுடன் இணைந்து, பல தீவிரவாத செயல்களை தடுத்துள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
5. வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில், பீரங்கி படையில் “ஐந்து பெண் அதிகாரிகள்” இந்திய ராணுவத்தால் ஏப்ரல் மாதம் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.
லெப்டினன்ட் மெஹக் சைனி, லெப்டினன்ட் சாக்ஷி துபே, லெப்டினன்ட் அதிதி யாதவ், லெப்டினன்ட் பயஸ் முட்கில் மற்றும் லெப்டினன்ட் அகன்ஷா ஆகியோர் அந்த ஐந்து அதிகாரிகள் ஆவர்.
6. சுனிதா :
இந்த ஆண்டு நவம்பர் மாதம், மருத்துவர் சுனிதா ராணுவ மருத்துவமனைகளில் உள்ள ரத்த மாற்று மையத்திற்கு தலைமை ஏற்ற முதல் பெண் அதிகாரியானார். டெல்லியில் உள்ள மிகப்பெரிய ராணுவ ரத்தமாற்று மையத்திற்கு இவர் தலைமை ஏற்றது குறிப்பிடத்தக்கது.
7. சுர்பி ஜக்மோலா :
117 பொறியாளர் படைப்பிரிவைச் சேர்ந்த இந்திய ராணுவ அதிகாரியான கேப்டன் சுர்பி ஜக்மோலா, பூட்டானில் உள்ள எல்லைச் சாலைகள் அமைப்பின் திட்டமான டண்டக்கில் நியமிக்கப்பட்டார்.
எல்லைச் சாலைகள் அமைப்பில், வெளிநாட்டுப் பணியில் நியமிக்கப்பட்ட முதல் பெண் அதிகாரி இவர் ஆவார்.
8. ஸ்க்வாட்ரான் லீடர் மனிஷா பதி :
மிசோரம் ஆளுநரின் உதவியாளர்-டி-கேம்பாக (ADC) ஸ்க்வாட்ரான் லீடர் மனிஷா பதி நியமிக்கப்பட்டார். இதன் மூலம் கவர்னரின் உதவியாளர்-டி-கேம்பாக நியமிக்கப்பட்ட நாட்டின் முதல் பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
9. கர்னல் சுசிதா சேகர் :
இந்திய ராணுவத்தின் வடக்கு கட்டளை மையத்தின் சப்ளை செயின் பராமரிப்புக்கு, தகவல் தொடர்பு மண்டல மெக்கானிக்கல் டிரான்ஸ்போர்ட் பட்டாலியன் பொறுப்புக்கு முதல் பெண் அதிகாரியாக கர்னல் சுசிதா சேகர் நியமிக்கப்பட்டார்.
10. கர்னல் கீதா ராணா :
கார்ப்ஸ் ஆஃப் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் மெக்கானிக்கல் இன்ஜினியர்களின் கர்னல் கீதா ராணா, கிழக்கு லடாக்கில் உள்ள ஒரு சுயாதீன களப் பட்டறையின் தலைமைப் பொறுப்பை ஏற்ற முதல் பெண் அதிகாரி ஆனார்.