ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டம் தேரா கி காலி வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டம் தேரா கி காலி என்ற பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் நேற்று மாலை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி சுடத்தொடங்கினர்.
இதனையடுத்து இரு தரப்புக்கு இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதில் 4 பாதுகாப்பு படையினர் வீர மரணம் அடைந்தனர். 3 பேர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் (LeT) பிரிவான மக்கள் பாசிச எதிர்ப்பு முன்னணி (PAFF) பொறுப்பேற்றுள்ளது. இதனையடுத்து தாக்குதல் நடந்த தேரா கி காலி வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.