இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றி கோப்பையை வென்றது.
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் மொத்தமாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் 2 டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்தியா விளையாடியது. இதன் முதல் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதனைத் தொடர்ந்து நேற்று மூன்றாவது போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
இந்திய அணியின் தொடக்க வீரராக ராஜத் பதிதார் மற்றும் சாய் சுதர்சன் களமிறங்கினர். இதில் பதிதார் 5 வது ஓவரில் 3 பௌண்டரீஸ் மற்றும் 1 சிக்சர் என மொத்தமாக 22 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து விளையாடி வந்த சாய் சுதர்சன் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக சஞ்சு சாம்சன் மற்றும் இந்திய அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் களமிறங்கினர்.
இதில் கே.எல்.ராகுல் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய திலக் வர்மா, சஞ்சு சாம்சன் கூட்டணி சிறப்பாக விளையாடி ரன்களை குவித்து வந்தது. இருவரும் பௌண்டரீஸ், சிக்சர்கள் என தெண் ஆப்பிரிக்கா பந்தை பறக்கவிட்டனர்.
இறுதியாக இந்த கூட்டணி 42வது ஓவரில் முடிவுக்கு வந்தது. திலக் வர்மா 5 பௌண்டரீஸ் மற்றும் 1 சிக்சர் என மொத்தமாக 77 பந்துகளில் 52 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். 45வது ஓவரில் சிறப்பாக விளையாடி வந்த சஞ்சு சாம்சன் 6 பௌண்டரீஸ் மற்றும் 3 சிக்சர்கள் என மொத்தமாக 114 பந்துகளில் 108 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய ரிங்கு சிங் 3 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்கள் என மொத்தமாக 38 ரன்களையும், தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 14 ரன்களையும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியாக 50 ஓவர்கள் முடிவில் இந்தியா 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் 296 ரன்களை எடுத்தது. தென் ஆப்பிரிக்கா அணியில் அதிகபட்சமாக பியூரன் ஹென்ட்ரிக்ஸ் 3 விக்கெட்களும், கேசவ் மகாராஜ், வியான் முல்டர் மற்றும் லிசாட் வில்லியம்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து 297 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக ரீசா ஹென்ட்ரிக்ஸ் மற்றும் டோனி டி ஜோர்ஜி களமிறங்கினர்.
ரீசா ஹென்ட்ரிக்ஸ் 19 ரன்களில் ஆட்டமிழக்க அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ராஸ்ஸி வான் டெர் டுசென் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் ஐடன் மார்க்ராம் 36 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரங்களில் ஆட்டமிழக்க தென் ஆப்பிரிக்கா அணியில் அதிகபட்சமாக அத்தொடக்க வீரராக களமிறங்கிய டோனி டி ஜோர்ஜி 6 பௌண்டரீஸ் மற்றும் 3 சிக்சர்கள் என மொத்தமாக 81 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இறுதியாக 46வது ஓவரில் தென் ஆப்பிரிக்கா அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 218 ரன்களை எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக அர்ஷிதீப் சிங் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
ஆவேஷ் கான் மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். முகேஷ் மற்றும் அக்சர் படேல் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
இதனால் இந்திய அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி கோப்பையை வென்றது.
இப்போட்டியில் ஆட்டநாயகன் விருது சிறப்பாக விளையாடி 108 ரன்களை அடித்த சஞ்சு சாம்சனுக்கு வழங்கப்பட்டது. மேலும் இப்போட்டியின் தொடர்நாயகன் விருது இந்திய அணியின் பந்துவீச்சாளர் அர்ஷிதீப் சிங் அவர்களுக்கு வழங்கப்பட்டது.