முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் வாழ்க்கை வரலாறு ‘மெயின் அடல் ஹூம்’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாகியுள்ளது. இதில் இந்தி நடிகர் பங்கஜ் திரிபாதி , வாஜ்பாயாக நடித்துள்ளார்.
ரவி ஜாதவ் இயக்கியுள்ள இந்தப் படத்தை வினோத் பானுஷாலி மற்றும் சந்தீப் சிங், கமலேஷ் பனுஷாலி தயாரித்துள்ளனர். இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. அதிலும் நடிகர் பங்கஜ் திரிபாதி, வாஜ்பாய் போலவே இருப்பதாக மக்களின் பாராட்டைப் பெற்றார்.
இந்நிலையில் நேற்று இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி மக்களிடையே நாள் வரவேற்பைப் பெற்று வருகிறது. மேலும் இந்த படம் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 19 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
மூன்று முறை பிரதமராக இருந்த வாஜ்பாயின் பால்ய காலம், கல்லூரி நாட்கள் மற்றும் அரசியல் வாழ்க்கை குறித்து இந்தப் படம் பேசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.