இன்று நாம் பையில் ஒரு ரூபாய் இல்லை என்றாலும் கூட வெளியே தைரியமாக செல்ல முடிகிறது என்றால், அதற்கு காரணம், செல்போன். அதில் உள்ள UPI ஆப்.
இந்த செல்போன் UPI ஆப் மூலம் கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்ற செயலிகளை பயன்படுத்தி, பணம் செலுத்த முடியும் என்ற தைரியமே.
சாலையோர கடைகளில் கூட QR மூலம் பேமெண்ட் செய்யும் வசதி உள்ளது. உலகம் முழுவதும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை வளர்ச்சி பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
உதாரணத்திற்கு, ஹோட்டல் முதல், மின் கட்டணம் வரை என அனைத்திற்கும் ஆன்லைன் மூலமே பணம் செலுத்தி வருகிறோம்.
இவ்வாறு நாம் பல வகையான ஆன்லைன் பேமெண்ட் செயலிகளை பயன்படுத்தும் போதும், அதில் பயன்படுத்தும் செயலிதான் UPI ஆப்.
இதனிடையே, சிலர் UPI செயலியைப் பயன்படுத்தாமல் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. அதாவது, UPI App-ல் வங்கி கணக்கை இணைத்து ஒரு வருடத்திற்கும் மேலாக எந்த வித பணபரிவர்த்தனையும் செய்யாமல் இருந்தால் யு.பி.ஐ. ID-கள் வரும் டிசம்பர் 31-ம் தேதியுடன் செயலிழக்கும் அபாயம் உள்ளது.
அவ்வாறு பயன்படுத்தாத UPI ஐடிகளை 2024-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் முடக்கப்படும் என இந்திய தேசிய கட்டணக் கழகம் (NPCI) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில், இந்த காலக்கெடு முடிய இன்னும் வெறும் 10 நாட்களே உள்ளதால், நீண்ட காலமாக பயன்படுத்தாத ID-களில் உடனே பண பரிவர்த்தனை செய்து, ஐடி முடக்கத்தை தவிர்க்கலாம்.