உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் வரும் ஜனவரி 22-ம் தேதி கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் விறுவிருப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த திருக்கோயிலுக்கு தேவைப்படும் 12 ஆலய மணி மற்றும் 36 பிடி மணிகள் என மொத்தம் 48 மணிகள் நாமக்கல்லில் கடந்த ஒரு மாத காலமாக, ஏராளமான தொழிலாளர்கள் மூலம் தயார் செய்யப்பட்டு வந்தது.
இதனைத் தொடர்ந்து, இந்த 48 மணிகளும், நாமக்கல்லில் உள்ள அருள்மிகு ஆஞ்சநேயர் திருகோவிலில் வைத்து பயபக்தியுடன் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர், இந் 48 மணிகளும் பெங்களூருக்கு லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
அங்கிருந்த அனைத்து மணிகளும் அயோத்தி ராமர் கோவிலுக்கு அனுப்பிவைக்கப்படும். திருக்கோவில் கும்பாபிஷேக தினம் அன்று இந்த மணிகள் அனைத்தும் அங்கு ஒலிக்க உள்ளன.
இந்த மணிகள் திருச்சி பெல் கம்பெனியில் வடிவமைக்கப்பட்டு, நாமக்கல் விஸ்வகர்மா தொழிலாளர்களால் மெருகூட்டி, கண் திறந்து அயோத்தி சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.