நாடாளுமன்ற கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!
Mar 15, 2026, 09:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடாளுமன்ற கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 19 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன!

Murugesan M by Murugesan M
Dec 22, 2023, 06:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் மீண்டும் கூடும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 4 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரையான18 நாட்களில் 14 அமர்வுகள் நடைபெற்றன.

இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

2023 டிசம்பர் 4-ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் மீண்டும் கூடும் தேதி குறிப்பிடாமல் 2023, டிசம்பர் 21 அன்று ஒத்திவைக்கப்பட்டது. இந்தக் கூட்டத் தொடர் 18 நாட்களில் 14 அமர்வுகளைக் கொண்டிருந்தது.

கூட்டத்தொடரின் போது மக்களவையில் 18 மசோதாக்களும் மாநிலங்களவையில் 17 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன. மக்களவையின் அனுமதியுடன் 3 மசோதாக்களும், மாநிலங்களவையின் அனுமதியுடன் ஒரு மசோதாவும் திரும்பப் பெறப்பட்டன.  இந்தக் கூட்டத்தொடரின் போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 19 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தொடரின் போது, 2023-24 ஆம் ஆண்டிற்கான துணை மானியக் கோரிக்கைகள் மற்றும் 2020-21 ஆம் ஆண்டிற்கான கூடுதல் மானியக் கோரிக்கைகள் முழுமையாக விவாதிக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

தொடர்புடைய நிதி ஒதுக்கீட்டு மசோதாக்கள் 12.12.2023 அன்று மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டு, 05 மணி 40 நிமிட நேர விவாதத்திற்குப் பிறகு நிறைவேற்றப்பட்டன. சுமார் 22 நிமிட விவாதத்திற்குப் பிறகு மாநிலங்களவை 19.12.2023 அன்று இந்த மசோதாக்களை திருப்பி அனுப்பியது.

பாதிக்கப்பட்டவர்களை மையமாகக் கொண்ட நீதியை உறுதி செய்வதற்கான குற்றவியல் நீதி அமைப்பு தொடர்பான மூன்று முக்கிய மசோதாக்களான இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1973, இந்திய சாட்சியச் சட்டம், 1872 ஆகியவற்றுக்குப் பதிலாக இந்திய குடிமைப் பாதுகாப்பு சட்டம், 2023, இந்திய நீதித்துறைச் சட்டம், 2023,  இந்திய சாட்சிய சட்டம், 2023 ஆகியவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தொடரின் போது இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட சில முக்கிய மசோதாக்கள் பின்வருமாறு:

வழக்கறிஞர்கள் (திருத்த) மசோதா, 2023.
ஜம்மு-காஷ்மீர் இடஒதுக்கீடு (திருத்த) மசோதா, 2023.
ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்த) மசோதா, 2023.
மத்திய பல்கலைக்கழகங்கள் (திருத்த) மசோதா, 2023
ரத்து மற்றும் திருத்த மசோதா, 2023
டெல்லி சட்டங்களின் தேசிய தலைநகரப் பகுதி சட்டங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) இரண்டாவது (திருத்த) மசோதா, 2023.
தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், பணி நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம்) மசோதா, 2023
பத்திரிகைகள் மற்றும் பருவ இதழ்கள் பதிவு மசோதா, 2023.
தொலைத்தொடர்பு மசோதா, 2023

மாநிலங்களவையில், விதி எண் 176-ன் கீழ் நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் தொடங்கி 10 மணி நேரம் 25 நிமிடங்களுக்கும் மேலாக ஒரு குறுகிய கால விவாதம் நடைபெற்றது.

மக்களவையின் அலுவல்கள் தோராயமாக 74% ஆகவும், மாநிலங்களவையின் அலுவல்கள் தோராயமாக 79% ஆகவும் இருந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: new parlimentAdjournment of the parliamentary session without specifying a date!
ShareTweetSendShare
Previous Post

ஆப்கானிஸ்தானில் ஊட்டச்சத்து குறைபாட்டால் 1 மில்லியன் குழந்தைகள் பாதிப்பு!

Next Post

தோனியின் 14 வருட சாதனையை நெருங்கிய கே.எல்.ராகுல் !

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies