திருவாரூர் மாவட்ட தி.மு.க பிரமுகர் ரமணா கஞ்சா கடத்திய போது காவல்துறையினரனால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்ட தி.மு.க இளைஞர் அணி துணை அமைப்பாளர், திருவாரூர் நகர பொருளாளர் மற்றும் திருவாரூர் நகராட்சி 24-வது வார்டு தி.மு.க கவுன்சிலராக இருப்பவர் ரஜினி சின்னா என்கிற சின்ன வீரன். இவரது மகன் ரமணா.
இந்த நிலையில், மாவட்டம் முழுவதும் ரமணா மற்றும் அவரது ஆட்கள், போலீசாருக்கு தெரியாமல் கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கிடைக்கவே, ரமணாவை மிக ரகசியமாக நோட்டம் விட்டுள்ளனர். இதில், ரமணா கஞ்சா விற்பனை செய்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, ரமணா கஞ்சா கடத்தியபோது போலீசார் அவரை கையும் களவுமான பிடித்து கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதற்கு தி.மு.க கும்பலே காரணம். கஞ்சா விற்பனையை தடை செய்ய முயற்சிக்கும் காவல்துறையை தடுத்து, கஞ்சா விற்பனைக்கு மாவட்டம் முழுவதும் துணை போகிறது தி.மு.க ரவுடி கும்பல் என பாஜக குற்றம் சாட்டியுள்ளது.