வங்கதேசம்-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் போட்டியில் வங்கதேசம், நியூசிலாந்தை 98 ரன்களில் வீழ்த்தி சாதனை படைத்துள்ளது.
வங்கதேசம் கிரிக்கெட் அணி நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடிவருகிறது .
இதன் முதல் இரண்டு போட்டிகளில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது, இருப்பினும் கண்துடைப்பிற்காக மூன்றாவது போட்டி நேற்று நடைபெற்றது.
இந்த போட்டியில் வங்கதேசம் அணி நியூசிலாந்து மண்ணில் முதல் முறையாக ஒரு நாள் போட்டியில் தங்களின் வெற்றி பதிவு செய்ததோடு நியூசிலாந்தை படுதோல்வி அடையச் செய்தது.
இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணிக்கு அடுத்தடுத்து விக்கெட்கள் இழக்க 32வது ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 98 ரன்களை மட்டுமே பெற்றது.
நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக வில் யங் 26 ரன்களும், நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லதாம் 21 ரன்களும் எடுத்தனர். அதேபோல் ஜோஷ் கிளார்க்சன் 16 ரன்களும், ஆதித்யா அசோக் 10 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஓர் இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.
வங்கதேச அணியில் அதிகபட்சமாக சௌமியா சர்க்கார், தன்சிம் ஹசன் சாகிப் மற்றும் ஷோரிஃபுல் இஸ்லாம் ஆகியோர் தலா 3 விக்கெட்களை எடுத்தனர். முஸ்தாபிசுர் ரஹ்மான் 1 விக்கெட்டை வீழ்த்தினார்.
99 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய வங்கதேசம் அணி 15 ஓவரில் இலக்கை அடைந்த்து வெற்றியை பதிவு செய்தது.
வங்கதேச அணியில் தொடக்க வீரர்க களமிறங்கிய சௌமியா சர்க்கார் 4 ரன்கள் எடுத்த நிலையில் காயம் காரணமாக வெளிய சென்றார்.
மற்றொரு தொடக்க வீரரான அனாமுல் ஹக் 37 ரன்களில் ஆட்டமிழக்க நஜ்முல் ஹொசைன் சாண்டோ 51 ரன்களை எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
நியூசிலாந்து அணி இந்த தொடரை கைப்பற்றினாலும், வங்கதேச அணி முதல் முறையாக நியூசிலாந்தை வீழ்த்தி வரலாற்று சாதனையை நியூசிலாந்து மண்ணில் நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது.