உலகம் முழுவதும் கடந்த ஒரு மாதத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டு முதன்முதலில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பு, உலகம்
முழுவதும் வேகமாக பரவியது. கொரோனாவால் உலகில் பெரும்பாலான நாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன. மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
கொரோனாவைக் கட்டுப்படுத்தும் விதமாக புதிய தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், கொரோனா வைரஸ் உருமாறி கொண்டே இருக்கிறது. இது உலக விஞ்ஞானிகளுக்கு சவாலாக உள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, கொரோனாவின் தாக்கம் குறைந்திருந்த நிலையில், தற்போது அதிகரிக்க தொடங்கி உள்ளது.
ஓமிக்ரான் பிஏ.2.86 வைரஸிலிருந்து திரிபு ஏற்பட்டு, ஜே.என். 1 எனும் புதிய வகை கொரோனா வைரஸ் உருவாகி உள்ளது. இதன் காரணமாக, உலகம் முழுவதும் வேகமாக கொரோனா வேகமாக பரவி வருகிறது.
கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த புதிய கொரோனா வைரஸ் பாதிப்பு, அடுத்தடுத்து சீனாவிலும், சிங்கப்பூரிலும் பரவியது.
சிங்கப்பூரில் இது மிக வேகமாக பரவி வருகிறது. இந்தியாவைப் பொறுத்த வரை புதிய வகை கொரோனா வைரஸால் இருபத்தி இரண்டு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 சதவிகிதம் அதிகரித்துள்ளது என உலக சுகாதார மையம் கவலை தெரிவித்துள்ளது.
கடந்த 28 நாட்களில் மட்டும் 8 இலட்சத்து 50 ஆயிரம் பேர் புதியதாக கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் ஜே.என். 1 கொரோனா வைரஸ். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் நாடுகளில் மட்டும் ஜே.என்.1 வகை கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு சுவாசக் கோளாறு ஏற்படுகிறது.
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மக்கள் அனைவரும் முகக்கவசம் அணியவும், அடிக்கடிக்க கைகழுவும் உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தி உள்ளது.