2024 ஆம் ஆண்டு ஐபிஎல்-க்காக இன்னும் 10 நாட்களில் வலைப்பயிற்சியை தொடங்கப்போகும் தோனி.
2024 ஆம் ஆண்டு 17வது ஐபிஎல் தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான மினி ஏலம் கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது.
இந்நிலையில் கிரிக்கெட்டில் இருந்து எம்.எஸ்.தோனி எப்போது ஓய்வு பெறப் போகிறார் என்பதுதான் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ள ஒரே கேள்வியாக இருக்கிறது.
தங்களது வாழ்க்கையில் பல மகிழ்ச்சியான தருணங்களை கொடுத்த தோனி இன்னும் சில ஆண்டுகள் விளையாட மாட்டார்களா என்று தான் ரசிகர்கள் ஏங்கி வருகின்றனர்.
ஆனால் தோனிக்கு தற்போது வயது 42 ஆகிவிட்டது. இதனால் அவர் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பது முடியாத காரியம் ஆகும்.
ஏற்கனவே 2023 ஐபிஎல் சீசனோடு கிரிக்கெட்டுக்கு முழுக்கு போட்டு விடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரசிகர்களுக்காக மேலும் ஒரு சீசன் விளையாட முயற்சி செய்வேன் என்று தோனி கூறியது கிரிக்கெட் ரசிகர்களை சற்று ஆறுதல் அடைய வைத்துள்ளது.
இந்த நிலையில், தோனி 10 நாட்களில் வலைபயிற்சியை தொடங்குவார் என சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி கே.எஸ். விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,
“தோனி இப்போது நன்றாக இருக்கிறார். அவர் உடற்பயிற்சி செய்கிறார். இன்னும் பத்து நாட்களில், அவரும் வலைபயிற்சியை தொடங்குவார்” என தெரிவித்தார்.