தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என ‘சோஹோ’ நிறுவனத்தின் நிறுவனரும், தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் உறுப்பினருமான ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தூத்துக்குடி, திருச்செந்தூரில் அதி கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், பெருமழை வெள்ளத்தில் ஏராளமானோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். வீடு, வாசல்களை இழந்தனர். தங்குவதற்கு இடம் இல்லாமலும், அவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவாபாரதி தென்தமிழ்நாடு களத்தில் இறங்கி இரவு பகல் பாராமல் உதவி செய்துவருகின்றனர்.
தூத்துக்குடியின் துயரம் துடைக்க உதவ வேண்டும் என ஸ்ரீதர் வேம்பு தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.
இன்று தூத்துக்குடியில் சேவா பாரதி தொண்டர்களை சந்தித்தேன். இந்த அமைப்பில் 1000 தன்னார்வலர்கள் இரவு பகல் பாராமல் வேலை செய்கின்றனர்.
Thoothukudi needs a lot of help. To donate, bank details:
Seva Bharathi Then Tamilnadu
SB 2340 01 000 019 310
Indian Overseas Bank, Mettupalayam.
IFSC IOBA0002340— Sridhar Vembu (@svembu) December 23, 2023
இன்றும், பல சுற்றுப்புறங்களில் இன்னும் நிறைய தண்ணீர் உள்ளது, தெருவில் இறந்த கன்றுக்குட்டியைக் கூட கண்டேன்.
தன்னலமற்ற தொண்டர்களை வணங்குகிறேன். தானம் செய்வோம் எனத் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடிக்கு நிறைய உதவிகள் தேவை!
நன்கொடை அளிக்க வேண்டிய வங்கியின் விவரங்கள்:
Seva Bharathi Then Tamilnadu
SB 2340 01 000 019 310
Indian Overseas Bank, Mettupalayam IFSC IOBA0002340 .