பாலஸ்தீன மக்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்த ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா ஆதரித்துள்ளது. இந்தத் தீர்மானத்திற்கு 172 நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளன.
கடந்த அக்டோபர் மாதம் 7-ஆம் தேதி இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் காஸா நகரைச் சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள் திடீர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். இதற்கு கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. இஸ்ரேல் நாட்டின் முப்படைகளின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் ஹமாஸ் தீவிரவாதிகள் திணறி வருகிறார்கள். விமானப்படைத் தாக்குதலில் காஸா நகரின் வடக்குப் பகுதியை சின்னாபின்னமாக்கிய இஸ்ரேல் இராணுவம், தற்போது தெற்குப் பகுதியிலும் தாக்குதலைத் தொடங்கி இருக்கிறது.
இஸ்ரேல் – ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டு உலக நாடுகள் பலவும் முயற்சி செய்து வருகின்றனர். ஹமாஸ் தீவிரவாதிகளை அழிக்காமல் போர் முடிவுக்கு வராது என்று இஸ்ரேல் கூறி வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர ஐ.நா. சபையில் தீர்மானங்கள் கொண்டுவந்தாலும், தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அமெரிக்கா அதை தடுத்து வருகிறது.
இந்நிலையில், இஸ்ரேல் – ஹமாஸ் போரால் ஏற்படுள்ள மனித உயிர் இழப்புகளைக் கருத்தில் கொண்டு உடனடியாக மனிதாபிமான அடிப்படையில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஐநா பொதுச் சபையில் வரைவுத் தீர்மானம் முன்மொழியப்பட்டது. இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது.
இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா உள்ளிட்ட 153 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட 10 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. 23 நாடுகள் வாக்களிக்கவில்லை.
கடந்த வாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு அரபு நாடுகளில் கவலையைத் தீர்த்தது.
இந்த முக்கியமான தீர்மானங்கள் மீதான இந்தியாவின் நிலைப்பாடு, ஐக்கிய நாடுகள் சபையில் இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலின் சிக்கல்களைத் தீர்ப்பதில் சமநிலையான அணுகுமுறைக்கான அதன் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.