போத்தனூர் ரயில் நிலையத்தை முனையமாக மாற்றவும், பொள்ளாச்சியில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு புதிய ரயில் இயக்க வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சந்தித்து மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து பாஜக கோவை தெற்கு மாவட்ட தலைவர் வசந்த ராஜன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
மாநில பாஜக தலைவர் அண்ணாமலையின் முயற்சியால் டெல்லியில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை நேற்று சந்தித்து, போத்தனூர் ரயில் நிலையத்தை முனையமாக மாற்றவும், பொள்ளாச்சியில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு புதிய ரயில் இயக்கவும், எர்ணாகுளம் – பாலக்காடு ரயிலை பொள்ளாச்சி வரை நீட்டிக்கவும், பொள்ளாச்சி – மேட்டுப்பாளையம் ரயில் இயக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது எனத் தெரிவித்துள்ளார்.
மாநில பாஜக தலைவர் திரு. @annamalai_k அண்ணனின் முயற்சியால் டெல்லியில் மத்திய ரயில்வே அமைச்சர் மாண்புமிகு திரு. அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை நேற்று சந்தித்து போத்தனூர் ரயில் நிலையத்தை முனையமாக மாற்றவும், பொள்ளாச்சியில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு புதிய ரயில் இயக்கவும், pic.twitter.com/AdfByhYKw5
— Vasantha rajan (@Vasanthcovaibjp) December 23, 2023