தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரிதும் நம்பியுள்ள, 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70.83 அடியாக உள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு ஆயிரத்து 399 கன அடியாக வந்து கொண்டிருந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி ஆயிரத்து 387 கன அடியாக நீர்வரத்து குறைந்துள்ளது.
அணையில் தற்போது 33.41 டி.எம்.சி தண்ணீர் இருப்பு உள்ளது. குடிநீர் தேவைக்காக அணையிலிருந்து 250 கன அடியாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
அணைக்கு வரும் நீரின் அளவைவிட, அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைவாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.