கனமழையாலும், வெள்ளத்தாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தென்மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட தமிழக பாஜக இளைஞர் அணியினருக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
கனமழையாலும், வெள்ளத்தாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தென்மாவட்டங்களில், தமிழக பாஜக சகோதர சகோதரிகள், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில், பொதுமக்களுக்கு உறுதுணையாகச் செயலாற்றி வருவது பெருமையளிக்கிறது.
கனமழையாலும், வெள்ளத்தாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தென்மாவட்டங்களில், @BJP4Tamilnadu சகோதர சகோதரிகள், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில், பொதுமக்களுக்கு உறுதுணையாகச் செயலாற்றி வருவது பெருமையளிக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி முகத்துவாரத்தில் அமைந்துள்ள புன்னக்காயல்… https://t.co/y6dgogHs9w
— K.Annamalai (@annamalai_k) December 24, 2023
தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி முகத்துவாரத்தில் அமைந்துள்ள புன்னக்காயல் மற்றும் சுற்றியுள்ள கடலோரக் கிராமங்கள் வெள்ளப் பாதிப்புக்குள்ளானதை அறிந்து, கடல் மார்க்கமாக அந்தப் பகுதிகளுக்குச் சென்று, பொதுமக்களைச் சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கியுள்ள தமிழக பாஜக இளைஞர் அணி தலைவர் சகோதரர் ரமேஷ் சிவா மற்றும் இளைஞரணி சகோதர சகோதரிகள் அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும், எனத் தெரிவித்துள்ளார்.