விடாமுயற்சி படப்பிடிப்பின் பொது நடிகர் அஜித் குமார், நடிகை பாவனாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார், இது குறித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான அஜித் குமார் தற்போது விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். தடம், மீகாமன் போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் மகிழ் திருமேனி விடாமுயற்சி படத்தையும் இயக்கி வருகிறார்.
இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில், அக்டோபர் மாதம் நடந்து முடிந்தது. இதை தொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்றுவருகிறது.
மிகவும் பரபரப்பாக எடுக்கப்பட்டுவரும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில், அஜித்துடன் நடிகர் ஆரவ், அர்ஜுன், ரெஜினா கசன்ரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நடித்து வருகின்றனர்.
இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் சுமார் 13 ஆண்டுகளுக்கு பின்னர், பிரபல மலையாள நடிகை பாவனா நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகர் அஜித் நடிகை பாவனாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில் அஜித் சிலருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கே பாவனா வர.. அஜித் அவரிடம் கொஞ்சம் லேட்டாகி விட்டது என்று கூறி மன்னிப்பு கேட்டார். அப்போது பாவனா நீங்கள் லேட்டாக வருவீர்கள் என்று சொன்னதால், நானும் கொஞ்சம் லேட்டாகி வந்தேன் என்று கூறினார்.
2010 ஆம் ஆண்டு வெளிவந்த அசல் என்ற திரைப்படத்தில் நடிகர் அஜித், நடிகை பாவனா இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.