இந்தியா – ஆஸ்திரேலியா பெண்கள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி மற்றும் அட்டவணையை பிசிசிஐ அறிவித்துள்ளது
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் தற்போது முடிவடைந்த நிலையில் அடுத்ததாக டி20 மற்றும் ஒரு நாள் தொடர் நடைபெறவுள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய பெண்கள் அணி மற்றும் போட்டி அட்டவணை ஆகியவற்றை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
இந்தியா – ஆஸ்திரேலியா பெண்கள் ODI கிரிக்கெட் அட்டவணை :
1. டிசம்பர் 28 – 1:30 pm – வான்கடே மைதானம்.
2. டிசம்பர் 30 – 1:30 pm – வான்கடே மைதானம்.
3. ஜனவரி 02 – 1:30 pm – வான்கடே மைதானம்.
இந்தியா – ஆஸ்திரேலியா பெண்கள் ODI கிரிக்கெட் – இந்திய அணி :
ஹர்மன்ப்ரீத் கவுர் ( கேப்டன் ), ஸ்மிருதி மந்தனா ( துணை கேப்டன் ), ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷஃபாலி வர்மா, தீப்தி ஷர்மா, யாஸ்திகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), அமன்ஜோத் கவுர், ஸ்ரேயங்கா படேல், மன்னத் காஷ்யப், சைகா சிங், ரேணுகா சிங், ரேணுகா தாக்கூர், டைட்டாஸ் சாது, பூஜா வஸ்த்ரகர், சினே ரானா, ஹர்லீன் தியோல்.
இந்தியா – ஆஸ்திரேலியா பெண்கள் டி20 கிரிக்கெட் அட்டவணை :
1. ஜனவரி 05 – 07:00 pm – டிஒய் படேல் மைதானம்.
2. ஜனவரி 07 – 07:00 pm – டிஒய் படேல் மைதானம்.
3. ஜனவரி 09 – 07:00 pm – டிஒய் படேல் மைதானம்.
இந்தியா – ஆஸ்திரேலியா பெண்கள் டி20 கிரிக்கெட் – இந்திய அணி :
ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷஃபாலி வர்மா, தீப்தி ஷர்மா, யாஸ்திகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), அமன்ஜோத் கவுர், ஸ்ரேயங்கா படேல், மன்னத் காஷ்யப், ரீனுகா இஷாக், தாக்கூர், டைட்டாஸ் சாது, பூஜா வஸ்த்ரகர், கனிகா அஹுஜா, மின்னு மணி.