முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு மரியாதையை அளிக்கும் விதமாக மெயின் அடல் ஹூம் படத்தின் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் வாழ்க்கை வரலாறு ‘மெயின் அடல் ஹூம்’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாகியுள்ளது. இதில் இந்தி நடிகர் பங்கஜ் திரிபாதி , வாஜ்பாயாக நடித்துள்ளார்.
ரவி ஜாதவ் இயக்கியுள்ள இந்தப் படத்தை வினோத் பானுஷாலி மற்றும் சந்தீப் சிங், கமலேஷ் பனுஷாலி தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு பயல் தேவ் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் ட்ரைலர் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இன்று முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு மரியாதையை அளிக்கும் விதமாக இப்படத்தின் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.