தேசத்தைக் காக்கும் எல்லையில் உள்ள ராணுவ வீரர்களின் தியாகத்தை மறந்துவிடக் கூடாது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பங்கேற்று பேசினார். அப்போது, இரு நாட்களுக்கு முன் தீவிரவாதிகள் தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
நாம் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும்போது, இந்த குளிரில் எல்லையில் பணிபுரிந்து நம்மையும், நம் நாட்டையும் பாதுகாக்கும் வீரர்களை நாம் மறந்துவிடக்கூடாது என தெரிவித்தார்.
பாதுகாப்புப்படையினரால் தான் பண்டிகைகளை குடும்பத்துடன் கொண்டாடும் பாக்கியம் கிடைத்துள்ளது என்றார். பார் உறுப்பினர்களுக்காக புதிய அறைகள் கட்டப்படும் என்றும் தலைமை நீதிபதி கூறினார். வழக்குகள் நிலுவையில் இருப்பதைக் குறைக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் சந்திரசூட் தெரிவித்தார்.