ஜம்மு காஷ்மீர் ரியாச்சி மாவட்டத்தில் திருமண கோஷ்டி சென்ற வேன் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் 2 பேர் பலியாகினார். 13 பேர் காயம் அடைந்தனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பல்மட்கோட்டில் இருந்து திருமண கோஷ்டிகளை ஏற்றிக்கொண்ட வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. படார் சாலையில் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதனையடுத்து உள்ளூர்வாசிகள் மற்றும் காவல்துறையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதில் இருவர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 13 பேர் சிக்ச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதில் நான்கு பேர் மேல் சிகிச்சைக்காக ஜிஎம்சி ரஜோரிக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலியானோர் எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.