சென்னையில் பிரபல தனியார் விடுதியில் தங்கியுள்ள இலங்கையைச் சேர்ந்த உதயகுமார் என்பவர் மெத்தபெட்டமைன் போதைப் பொருளை கடத்துவதாக கடந்த டிச.10 -ம் தேதி மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, உதயகுமாரை பிடித்து விசாரணை நடத்திய போலீசார், அவருக்கு போதைப் பொருள் சப்ளை செய்த அக்பர் அலி என்பவரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தினார். இதில், ரூ.280 கோடி மதிப்பிலான 56 கிலோ மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த விகாரத்தை என்ஐஏ அதிகாரிகள் கையில் எடுத்துள்ளனர்.
இது தொடர்பாக, என்.ஐ.ஏ. தீவிர விசாரண நடத்தியபோது, மணிப்பூரில் இருந்து இரயில் மூலம் சென்னை கடத்தி வரப்பட்டதும், ஏற்கனவே, 10 வருடம் சிறையில் இருந்த அக்பர் அலி மீண்டும் கடத்தலில் ஈடுபட்டுள்ளதும், அதை தனித்தனியாக பிரித்து இலங்கைக்கு கடத்த திட்டமிட்டதும் தெரியவந்தது.
இதனிடையே, போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைக்கும் பணம் தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்படுகிறதா என்றும் என்ஐஏ விசாரணை நடத்தி வருகிறது.