இந்தியாவில் கொரோனா பரவல் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தென்னிந்தியாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில், இன்று காலை 8 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக கேரளாவில் 376 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 128 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 247 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்தார்.
இதேபோல், கர்நாடகாவில் 106 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 344 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 33 பேர் மீண்டுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 29 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 132 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 20 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.