தென்கிழக்கு வங்கக்கடலில் இலங்கை மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட புயல் சுழற்சி காரணமாக நெல்லை மற்றும் தூத்துக்குடியில் கடும் மழை வரலாறு காணாத கனமழை பெய்தது.
அதாவது, கடந்த 16-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டம் கனமழையால் மிதந்தது. மழை வெள்ளத்தில் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. சாலைகள் ஆங்காங்கே சேதம் அடைந்தன.
இந்த நிலையில், தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவா பாரதி தென்தமிழ்நாடு, உணவு உடை, மருந்து உள்ளிட்ட 21 அத்தியாவசியப் பொருட்களை வழங்கியது.
இந்த நிலையில், தென்காசி மத்தளம்பாறையில் ஸ்ரீதர் வேம்புவின் சோஹோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் சமூக முன்னெடுப்புக்காகவும், கிராமப்புற வளர்ச்சிக்காவும் பணியாற்றி வருகிறது.
இந்த நிலையில், அதன் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, சேவா பாரதி தென் தமிழ்நாடு உடன் இணைந்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தில் மக்களுக்கு நேரடியாகவே வந்து சேவை செய்தார். பல்வேறு வாகனங்களில் நிவாணரப் பொருட்கள் மக்களுக்கு விநியோகம் செய்தார்.
ஏற்கனவே, தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவா பாரதி தென் தமிழ்நாடு ஏராளமான நிவாரணப் பொருட்களை இரவு – பகலாக வழங்கி வருகிறது. கூடவே, மருத்துவ முகாம் உள்ளிட்டவைகளையும் நடத்தி வருகிறது.
இதனால், மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் சேவா பாரதி தென்தமிழ்நாடு – சோஹோ நிறுவனத்திற்கு மனதார நன்றி தெரிவித்தனர்.