மதுரையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக, மதுரையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி மாநில பொதுச் செயலாளர் இராம. ஸ்ரீனிவாசன் மாவட்ட ஆட்சியர் அணிஷ்சேகரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.
அதில், புகழ் பெற்ற மதுரையில், மிகப்பெரிய தொழில்சாலைகளோ, மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் இல்லை. இதனால், மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் வசிக்கும் இளைஞர்கள் பலர் வேலைதேடி சென்னை, திருப்பூர், கோயம்புத்தூர் போன்ற தொழில் நகரங்களை நோக்கி சென்று வருகின்றனர்.
உள்கட்ட மைப்பு உடைய நகரமாக மதுரை உள்ளது. இதனை பயன்படுத்தி மதுரையை ஒரு தொழில் நகரமாக மாற்றும் வண்ணம் மிகப்பெரிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் முதலீட்டாளர்கள் மாநாடு மதுரையில் நடந்த வேண்டும்.
தமிழக அரசால் மாட்டுதாவணியில் அமைய உள்ள டைட்டல் பார்க், வடபழஞ்சியில் அமையும் பட்சத்தில் அதனை சுற்றி உள்ள பகுதிகள் வளர்ச்சி பெறும். அப்பகுதிகளில், வசிக்கும் மக்களின் வாழ்வாதாரமும் நன்றாகவே உயரும்.
அதே போல், மதுரையே சுற்றி உள்ள மாவட்டங்களிலும் கிரைனைட் குவாரிகள் இயங்கி வருகிறது. மதுரையில் மட்டும் அனைத்து கிரைனைட்குவாரி களும் தடை செய்யபட்டுள்ளது. இதனால், மேலூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கபட்டுள்ளது.
அரசு விதிகளுக்கு புறம்பாக செயல்பட்ட குவாரிகளை தவிர்த்து மற்ற கிரைனைட் குவாரிகள் இயங்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.