'ஐஎன்எஸ் இம்பால்' போர்க் கப்பல் : இன்று கடற்படையில் இணைகிறது !
Mar 15, 2026, 07:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

‘ஐஎன்எஸ் இம்பால்’ போர்க் கப்பல் : இன்று கடற்படையில் இணைகிறது !

Murugesan M by Murugesan M
Dec 26, 2023, 11:14 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘ஐஎன்எஸ் இம்பால்’ போர்க் கப்பல் இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. இந்த விழாவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார்.

சமீப காலமாகச் சீனாவின் உளவு கப்பல்கள் இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடும் ஆதிக்கத்தைச் செலுத்தி வருகின்றன. எனவே இதற்கு முடிவுகட்ட இந்தியா தனது கடற்படையின் பலத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கூட்டி வருகிறது.

இதன் வெளிப்பாடாக ஐஎன்எஸ் இம்பால் என்னும் போர்க் கப்பலை இந்தியக் கடற்படையில் இணைக்கப்படவுள்ளது. இந்த கப்பல் இன்று மும்பையில் உள்ள கடற்படை தளத்திலிருந்து பயன்பாட்டுக்கு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பங்கேற்கிறார்.

இந்தியப் பெருங்கடல், வங்கக்கடல், அரபிக்கடல் மற்றும் என மூன்று முக்கிய கடல்களை எல்லையாகக் கொண்டிருக்கும் இந்தியாவுக்குக் கடற்படையை வலுவாகக் கட்டமைக்க வேண்டியது அவசியமாகும்.

அந்த வகையில் தற்போது ஐஎன்எஸ் இம்பால் எனும் போர்க் கப்பலைக் களத்தில் இறக்கவுள்ளது இந்தியா. சுமார் 163 மீ நீளமும், 7,400 டன் எடையும் கொண்ட இந்த கப்பல் நாட்டின் கடல் எல்லைகளைப் பாதுகாப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கும்.

இந்த கப்பலின் சிறப்பம்சமே இதில் இருக்கும் சூப்பர் சோனிக் ஏவுகணைதான். மணிக்கு 1,236 கி.மீ வேகத்தில் சென்று இந்த ஏவுகணைகள் இலக்கை தாக்கும். இந்த கப்பலின் கட்டுமானத்தில் 75 சதவிகிதம் உள்நாட்டுப் பொருட்களே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

இதில் நீர்மூழ்கிக் கப்பலைத் தாக்கும் வகையில் ஏவுகணைகள் இருப்பதால் கடல் பரப்பில் இந்த கப்பலைத் தாண்டி எதுவும் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முடியாது. நம்ப முடியாத குறைந்த காலத்தில் இந்த போர் கப்பல் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

கடந்த 2017ம் ஆண்டு, இந்த கப்பலைக் கட்டும் பணிகள் தொடங்கின. இரண்டு ஆண்டுகளில் 2019ம் ஆண்டில் கப்பலின் முழு கட்டுமானமும் முடிக்கப்பட்டு சோதனைக்காகக் கடலில் இறக்கப்பட்டது. அதன் பின்னர் ஒவ்வொரு தொழில்நுட்பமாக மேம்படுத்தப்பட்டிருக்கிறது.

ஆங்கிலேயர்கள் காலத்தில், விடுதலைக்காகப் போராடிய மணிப்பூர் மக்களின் தியாகங்களை நினைவுகூரும் வகையில் இம்பால் எனும் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

Tags: defence minister rajnath singhINS Impalimpal shipindian navy warship
ShareTweetSendShare
Previous Post

மேட்டூர் அணை: நீர்மட்டம் 71.02 அடியாக அதிகரிப்பு!

Next Post

லடாக்கில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies