இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 412 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 412 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 170 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பால் கர்நாடகாவில் 3 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 33 ஆயிரத்து 337 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 293 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 4 கோடியே 44 இலட்சத்து 72 ஆயிரத்து 153 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.
தற்போது வரை 220 கோடியே 67 இலட்சத்து 79 ஆயிரத்து 81 டோஸ் கோவிட்-19 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.