தாமிரபரணி நதியில் மணல் எடுப்பதைத் தடை செய்ய, தன்னலமின்றிப் போராடி வெற்றி கண்டவர் ஐயா நல்லகண்ணு எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஐயா நல்லகண்ணு அவர்களுக்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஐயா நல்லகண்ணு அவர்களுக்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எளிமையான மனிதர். சிறந்த எழுத்தாளர். சமூக சீர்திருத்தவாதி. தாமிரபரணி நதியில் மணல் எடுப்பதைத் தடை செய்ய, தன்னலமின்றிப் போராடி வெற்றி…
— K.Annamalai (@annamalai_k) December 26, 2023
எளிமையான மனிதர், சிறந்த எழுத்தாளர். சமூக சீர்திருத்தவாதி. தாமிரபரணி நதியில் மணல் எடுப்பதைத் தடை செய்ய, தன்னலமின்றிப் போராடி வெற்றி கண்டவர்.
ஐயா நல்லக்கண்ணு அவர்கள், நல்ல உடல்நலத்துடன், நீண்ட காலம் மக்கள் பணி தொடர வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன்.