சூரியனைக் ஆய்வு செய்யும் ஆய்வாளர்கள், சூரியனின் மேற்பரப்பில் மிகவும் வினோதமான சூரிய புள்ளிகளைக் கண்டுபிடித்துள்ளனர். இது சூரியனின் வைப்ரேஷன் பேர்டனில் மாற்றத்தை ஏற்படுத்துவதாகத் தெரிவித்துள்ளனர்.
உலகெங்கும் உள்ள ஆய்வாளர்கள் சூரியனைக் குறித்தும் அதில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர்.
அதில், சூரியனின் தொலைதூரத்தில் அமைந்துள்ள ஒரு பெரிய சூரிய புள்ளியை ஆய்வாளர்கள் ஹீலியோசிஸ்மாலஜி தொழில்நுட்பம் மூலம் கண்டுபிடித்துள்ளனர்.
ஹீலியோசிஸ்மாலஜி என்பது பூமியில் நில அதிர்வை ஆய்வு செய்யும் துறையாகும். சூரியனின் உள் அமைப்பு மற்றும் இயக்கவியலை ஆய்வு செய்வதே இதன் நோக்கமாகவுள்ளது.
இவை சூரியனின் மேற்பரப்பிற்கு ஏற்படும் ஒலி அலைகள் மற்றும் மாற்றங்களைக் கணக்கிட உதவும். இதனைக் கொண்டு சூரியப் புள்ளி மிகவும் பெரியதாக இருப்பதாகவும் இது சூரியனின் அதிர்வு பேட்டன்களில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இது விண்வெளி வானிலையில் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்றும் தெரிவித்துள்ளனர். அடுத்தாண்டு ஜனவரி மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் சூரிய சுழற்சி உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அப்போது சூரியன் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நிலையில், அந்த காலகட்டத்தில் ஆய்வுகளைத் தீவிரப்படுத்தினால் சூரியக் குடும்பத்தின் தோற்றம், பூமியின் தோற்றம் எனப் பல தகவல்களைத் தெரிந்து கொள்ள முடியும் என்பதே ஆய்வாளர்களின் நோக்கமாக உள்ளது.
மேலும் இந்த ஹீலியோசிஸ்மாலஜி சூரியனின் வெப்பம், அடர்த்தி, சுழற்சி வேகம் ஆகியவற்றை வரை படமாக்குவதற்கும், சூரியனின் தொலைவில் உள்ள சூரிய புள்ளிகளைக் கண்டறிவதற்கும் ஆய்வாளர்களை இந்த முறையைப் பயன்படுத்தியுள்ளனர்.