தூத்துக்குடி குறிஞ்சி நகரில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு செய்து பொது மக்களிடம் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளைக் கேட்டறிந்தார் .
கடந்த டிசம்பர் 16ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை மிக அதிக அளவில் கொட்டித் தீர்த்த மிக காண மழையால் என்றும் இல்லாத அளவுக்கு நெல்லை தூத்துக்குடி கன்னியாகுமரி தென்காசி ஆகிய மாவட்டங்கள் பெருமளவில் பாதிப்புக்குள்ளானது.
இந்நிலையில் பாதிப்புக்குள்ளான பகுதிகளைப் பார்வையிட வந்துள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன் உடன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் .இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, தி.மு.க., எம்.பி., கனிமொழி, உயர் அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகள் குறித்த தமிழக அரசின் நிவாரண கோரிக்கை அறிக்கையை தங்கம் தென்னரசு , மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கொடுத்தனர் .
இதன்,பின் தூத்துக்குடி குறிஞ்சி நகரில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
முன்னதாக விமானநிலையம் வந்திறங்கிய அவரை மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி . மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உள்ளிட்டோர் வரவேற்றனர் .